‘நாடும் நாட்டு மக்களும்’…..,சூது கவ்வும் 2 மோஷன் போஸ்டர் ரிலீஸ்……,

0
'நாடும் நாட்டு மக்களும்'.....,சூது கவ்வும் 2 மோஷன் போஸ்டர் ரிலீஸ்......,
'நாடும் நாட்டு மக்களும்'.....,சூது கவ்வும் 2 மோஷன் போஸ்டர் ரிலீஸ்......,

கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சூது கவ்வும்’. நலன் குமாரசாமி இயக்கிய இந்த திரைப்படத்தில் நடிகை சஞ்சிதா ஷெட்டி, அசோக்செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக் என பலர் நடித்திருந்தனர். வித்தியாசமான நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்புகளை பெற்றிருந்தது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை அடுத்து, அதன் 2 ஆம் பாகத்தை இயக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியானது. அந்த வகையில் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தை இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்க, நடிகர் சிவா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

கடுமையான உடற்பயிற்சியில் நடிகை மாளவிகா…..,என்னப்பா இப்படி எளச்சுடீங்க….,

இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘சூது கவ்வும் 1’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் தோற்றத்தைப் போல வெளியான சிவாவின் தோற்றம் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here