சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கிறாரா கவுண்டமணி? அவரே வெளியிட்ட பதிவு!!!

0

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை என்றாலே உடனே நியாபகத்துக்கு வருவது கவுண்டமணி, செந்தில் கூட்டணி தான். அந்த அளவிற்கு கவுண்டமணி அவர்கள் பேமஸான ஒருவர். இந்நிலையில் அதே நகைச்சுவை துறையை கையில் கொண்டு திரைக்கு வந்து சாதித்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளார்.

எந்த அளவிற்கு வெற்றி திரைப்படங்களாக இருந்தாலும் கூட, அதன் வெற்றிக்கு ஒரு சிறு பங்காவது நகைச்சுவை துணை புரிந்திருக்கும். மேலும் பல வெற்றி படங்கள் நகைச்சுவையை மட்டும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த அளவிற்கு மனிதர்களுக்கும், திரைப்படங்களுக்கும் நகைச்சுவை அவசியம். மேலும் அந்த துறையில் ஒரு சிலர் மட்டுமே என்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தில்  உள்ளனர். அதில் ஒருவர் தான் கவுண்டமணி அவர்கள். தன்னுடைய டைமிங் காமெடிகளால் மக்கள் மத்தியில் சிரிப்பை வரவழைத்தவர். இன்றளவும் அவரின் காமெடிகள் சலிக்காமல் நிலைத்து உள்ளது.

மேலும் சின்னத்திரையில் தன்னுடைய நகைச்சுவை மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவி ஷோக்கள் மூலம் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து சிம்மாசனத்தில் அமர்ந்தார். இந்த திறமையை வைத்து கொண்டு சினிமாவிலும் நுழைந்தார். முதலில் ஒரு நகைச்சுவை நடிகராக வந்தார். அதன் பின்னர் மெல்ல மெல்ல கதாநாயகனாக தன்னை மாற்றி கொண்டு பட்டையை கிளப்பி வருகிறார்.

ரசிகர்கள் சும்மா இருந்தா கூட இவங்க விடமாட்டாங்க போலயே… கண்களாலே சூடேற்றும் அனுபமா!!!

இந்நிலையில் இந்த இரண்டு நகைச்சுவை நடிகர்களும் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை  இணையத்தில் சிவகார்த்திகேயன் வெளியிட்டு உள்ளார். மேலும் இவர்களின் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இருவரும் சேர்ந்து படம் நடிக்க உள்ளாரோ? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. என்ன தான் குழப்பம் எழுந்தாலும் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் மட்டும் குறையவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here