சிவகார்த்திகேயனுடன் இணைந்த சீரியல் நடிகை… சந்தேகத்தை கிளப்பிய புகைப்படம்!!!

0

பல சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தீபா. தற்போது இவர் மற்றும் சிவகார்த்திகேயன் சேர்ந்து கொண்டு எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. டாக்டர் படத்தை தொடர்ந்து அடுத்த படத்திலும் இணைந்து நடிக்கிறார்களா என்ற சந்தேகத்தை இந்த புகைப்படம் எழுப்பி உள்ளது.

சன் டிவியின் பிரபல வெற்றி சீரியலான மெட்டி ஒலி நாடகம் மூலம் திரைக்கு வந்தவர் தீபா சங்கர் . அதன் பின்னர் கோலங்கள் என்ற வெற்றி சீரியலிலும்  நடித்து உள்ளார். இந்த இரு வெற்றி சீரியல்களுக்கு பிறகு பல சீரியல்கள் மற்றும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அங்கு தனது வெகுளித்தனமான பேச்சாலும், சிரிப்பாலும் அனைவரையும் கவர்ந்தார்.

மேலும் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு நகைச்சுவை கேரக்டர்கள் வரத்தொடங்கி உள்ளதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி கொண்டாட்டத்தின் போது கூறி இருந்தார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் அவர்களின் டாக்டர் படத்தில் இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டு வந்தது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவுற்ற  நிலையில் தற்போது தீபா மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து உள்ளது போல ஒரு புகைப்படம் இணையத்தில் உலா வருகிறது.

நீங்க பாட்டுக்கு  வந்தீங்க.. தொறந்தீங்க.. போறீங்க.. என்ன ஆண்ட்ரியா  இதெல்லாம்?? ரசிகர்களை  சூடேற்றும் வீடியோ!!

மேலும் இந்த புகைப்படம் பார்க்கையில் இது ஒரு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் போன்ற தோற்றத்தை தருகிறது. இதனால் தீபா சிவகார்த்திகேயன் உடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க  உள்ளாரா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் கிளப்பி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here