இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. முதல் முறையாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகும் இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. பெருமளவு பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வரும் ‘கங்குவா’ திரைப்படத்தில் நடிகர் சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் சேர்ந்து, யோகி பாபு, கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் சென்னை பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
IPL 2023: டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு….,வெற்றி யாருக்கு?
சமீபத்தில் கூட, கங்குவா திரைப்படத்திற்காக நடிகர் சூர்யா தீவிரமாக உடற்பயிற்சி செய்வது போல புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. இந்த நிலையில், கங்குவா திரைப்பட ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி, இயக்குனர் சிவாவின் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட ரசிகர்கள் அதனை சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.