அச்சு அசலாக சிரஞ்சீவி சர்ஜா போலவே இருக்கும் மகன் – மேக்னா ராஜ் வெளியிட்ட புகைப்படம்!!

0
siranjeevi sarja
siranjeevi sarja

மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி ஷர்ஜாவின் குழந்தை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அச்சு அசலாக அவரை போலவே இருக்கும் புகைப்படத்தை பார்த்த பலரும் ஷாக்காகியுள்ளனர்.

சிரஞ்சீவி சர்ஜா

கன்னட திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மனதை கொள்ளை கொண்டவர் சிரஞ்சீவி சர்ஜா. அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். பல ஹிட் படங்களை கொடுத்து வளர்ந்து வரும் நடிகராகும் அளவிற்கு முன்னேறியிருந்தார் சிரஞ்சீவி. தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் அர்ஜுனின் அக்கா மகன் தான் சிரஞ்சீவி சர்ஜா. தமிழில் ‘காதல் சொல்ல வந்தேன்’ என்ற பாடத்தில் நடித்த மேக்னா ராஜ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

siranjeevi sarja
siranjeevi sarja

திருமணம் சந்தோசமாக வாழ்ந்து வந்த சூழ்நிலையில் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார் சிரஞ்சீவி சர்ஜா. இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் மேக்னா ராஜ் அப்பொழுது கர்ப்பமாக வேறு இருந்தார். இதுவே பலருக்கும் ஷாக். மேக்னா இந்த வயதில் இப்படி ஒரு கொடுமையா?? என பலரும் துக்கத்தில் ஆழ்ந்தனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் மகளா இது?? எப்படி இருக்காங்கன்னு பாருங்களே!!

சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. அதில் சிரஞ்சீவி சர்ஜாவின் உருவ படத்தை அருகில் வைத்து இந்த விழா நடந்தது. தற்போது அவருக்கு குழந்தை பிறந்த நிலையில் தற்போதைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அச்சு அசலாக சிரஞ்சீவி சர்ஜா போலவே இருக்கும் குழந்தைக்கு பலரும் தங்களது ஆசிர்வாதத்தை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here