சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் ஸ்ருதியின் அப்பா அண்ணாமலை இடம் உன் பையன் ரவி பண்றது சரி இல்லை என எச்சரிக்கிறார். உடனே அண்ணாமலை முதலில் உங்க பொண்ண சொல்லி வையுங்க என பதிலடி கொடுக்கிறார். பின் வீட்டுக்கு வரும் அண்ணாமலை ரவியிடம் ஸ்ருதி பற்றி விசாரிக்க அவர் தான் பிரண்டாக பழகுவதாக சொல்கிறார். இதற்கு அண்ணாமலை இனி அவங்க சவகாசம் நமக்கு வேண்டாம் அந்த பொண்ணோட பேசுறத நிறுத்திக்கோ என்கிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அடுத்ததாக விஜயா அண்ணாமலை வீட்டில் இருக்க அந்த நேரத்தில் முத்து வருகிறார். கூடவே மீனா வருவதைப் பார்த்து விஜயா அதிர்ச்சியாகிறார். மேலும் மீனாவை அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்புங்க என்று சண்டை போட முத்து ரோகிணி மட்டும் இங்கதான இருக்கா. இவ மட்டும் எதுக்கு போனோம் என பதிலடி கொடுக்கிறார். பின் வீட்டுக்கு மளிகை சாமான் வர அதன் பிள்ளை பார்த்து முத்து அதிர்ச்சியாகிறார். மேலும் அதில் உள்ள பொருட்களை எடுத்து பார்க்க ரோகிணிக்கு வாங்கியதாக விஜயா சொல்கிறார். உடனே முத்து மனோஜிடம் உன் பொண்டாட்டிக்கு நீ வாங்கி தரவேண்டியது தான என சண்டைக்கு நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
தமிழக மக்களே அலர்ட்.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!!!!