
சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் ஸ்ருதி ரவியிடம் லவ் பண்ணுவதாக சொல்கிறார். இதைக் கேட்டு முதலில் மறுக்கும் ரவி பின்பு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். அந்த நேரத்தில் ஸ்ருதியின் அம்மா அப்பா வர ரவி இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியாகின்றனர். பின் ஸ்ருதியின் அம்மா கோபப்பட அவரது அப்பா அண்ணாமலையிடம் பேசிக் கொள்ளலாம் என்கிறார். அடுத்ததாக முத்து வீட்டுக்கு வர சாப்பாடு எதுவும் இல்லாததை பார்த்து பசியில் வாடுகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
பின் மீனாவுக்கு கால் பண்ணி சாப்பாடு இருக்கா என்று கேட்க அவர் உடனே வீட்டுக்கு வர சொல்கிறார். முத்து வருவதால் மீனா கடைக்கு சென்று எல்லாத்தையும் வாங்கி வருகிறார். இந்த பக்கம் ஸ்ருதியின் அப்பா அண்ணாமலைக்கு கால் பண்ணி உங்களிடம் முக்கிய விஷயம் பேச வேண்டும் என்றும் வீட்டுக்கு வருமாறு சொல்கிறார். ஆனால் அண்ணாமலை உங்களுக்கு தேவனா நீங்கதான் வீட்டுக்கு வரணும். என்னால வர முடியாது என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.