முத்து சொன்ன குட் நியூஸ்.., ஆத்திரத்தில் ரோகிணியிடம் சண்டைபோடும் விஜயா., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!!

0
சிறகடிக்க ஆசை சீரியலில் ஒவ்வொரு விஷயத்திலும் இப்போது மீனா விஜயாவுக்கு பதிலடி கொடுத்துக் கொண்டே இருக்கிறார். இப்படி இருக்கையில் முத்து வாங்கி கொடுத்த தாலியை கோவிலில் வைத்து மீனா மறுபடியும் தாலி கட்ட சொல்கிறார். இத்துடன் மாலையும் கழுத்துமாக வீட்டு வாசலில் வந்து முத்து மீனா இருவரும் நிற்கின்றனர். இதை பார்த்து அண்ணாமலை சந்தோஷப்பட்டாலும் விஜயா அதிர்ச்சியாகிறார். மேலும் மீனாவிடம் என்ன வெறுப்பு ஏத்துவதற்காகவே இப்படி செய்றியா என சத்தம் போடுகிறார்.
இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இனிவரும் எபிசோடுகளில் மீனா கர்ப்பமாக இருப்பாராம். இந்த விஷயத்தை முத்து சந்தோஷமாக வீட்டில் உள்ளவர்களிடம் சொல்வாராம். ஆனால் விஜயாவுக்கு இந்த விஷயம் தலையில் இடியை தூக்கி போட்டது போல் இருக்குமாம். மேலும் ரோகிணியிடம் உனக்கு முன்னாடி அந்த மீனா கர்ப்பம் ஆகிட்டா. இனி அந்தக் கிழவி சொத்து இவளுக்குத்தான் போகப்போது. நீ எதுக்குமே லாய்க்கு இல்லையா சண்டை போடுவாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here