சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை எப்படியோ மீனாவை வீட்டுக்குள் அழைத்து வருகிறார். ஆனால் இது முத்துவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. வேறு வழி இல்லாததால் முத்துவும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இப்படி இருக்கையில் இந்த சீரியலின் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது மீனா ரூமிற்குள் செல்ல முத்து நீ எதுக்கு இங்க வந்த என கேட்பாராம்.
Enewz Tamil WhatsApp Channel
உடனே மீனா இதுதான நமது ரூம் என்று சொல்ல இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அப்பாவுக்காக தான் உன்ன இங்க வர சொன்னேன். என்ன பொறுத்த வர நீ இந்த வீட்டு வேலைக்காரி மட்டும்தான். இனி ரூமுக்குள்ள எல்லாம் வரக்கூடாது என்று சொல்வாராம். இதைக் கேட்ட மீனா என்ன சொல்வது என்று தெரியாமல் மனம் உடைந்த போவாராம். இதை மறைந்து நின்று விஜயா கேட்க முத்துவா இப்படி எல்லாம் பேசுறது என ஆச்சரியப்படுவாராம்.