சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் மேல் உள்ள கோபத்தால் முத்து அவரை வீட்டை விட்டு துரத்துகிறார். இந்த நேரத்தில் அண்ணாமலைக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போக டாக்டர்கள் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்கின்றனர். அப்போது முத்து, விஜயா பணத்துக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்க மீனா தன் நகையை அடமானம் வைத்து பணத்தை கொடுக்கிறார். இருந்தாலும் அவரை குடும்பத்தில் உள்ளவர்கள் அசிங்கமாக பேசி வெளியே துரத்தி விடுகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
இப்படி இருக்கையில் இந்த சீரியலின் அடுத்த வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது முத்து மீனா, அவரது அம்மா எல்லோரும் அண்ணாமலையை பார்க்க ஹாஸ்பிடலுக்கு செல்வார்களாம். அப்போது முத்து நீங்க எதுக்கு இங்க வந்தீங்க. உங்களால தான் அப்பாக்கு இப்படி ஆச்சு என திட்டுவாராம். ஒரு கட்டத்தில் மீனாவின் அம்மா ஐயோ மாப்பிள்ளை நாங்க சொல்றத கொஞ்சம் கேளுங்க. தயவு செஞ்சு மீனாவ கஷ்டப்படுத்தாதீங்க. அவ இப்போ கர்ப்பமா இருக்கா என சொல்லுவாராம். இதைக் கேட்ட முத்து என்ன சொல்வது என்று தெரியாமல் தவிக்க விஜயா அதிர்ச்சியாவராம். இதுதான் அடுத்து வரும் எபிசோடில் அரங்கேறுமாம்.
அஜித் பட நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!