சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா செய்த ஒரு தவறால் குடும்பத்தில் உள்ள அனைவரும் அவரை வெறுக்கின்றனர். மேலும் ரோகிணி இதையே காரணமாக வைத்துக் கொண்டு மீனாவை மட்டமாக பேசுகிறார். ரோகினியுடன் சேர்ந்து கொண்டு விஜயாவும் மீனாவின் குடும்பத்தையும் அவரையும் கண்டபடி திட்டுகிறார். இப்படி இருக்கையில் இந்த சீரியலின் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது அந்த PA ரோகிணியிடம் பணம் கேட்டு மிரட்டி கொண்டுள்ளார். ஆனால் ரோகிணி நடந்த பிரச்சனையில் அதை சுத்தமாக மறந்து விட்டார்.
Enewz Tamil WhatsApp Channel
இந்த நேரத்தில் அந்த PA ரோகிணியை தேடி வீட்டுக்கே வந்து விடுவாராம். மேலும் அங்கு முத்து இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சியாவாரம். ஆனாலும் ரோகிணியை பற்றி குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் சொல்லுவாராம். இதைக் கேட்டு விஜயா அதிர்ச்சியாக மீனா இதுதான் உங்க மருமகளோட லட்சணமா?? அதுக்கு நா எவ்வளவோ பரவாயில்லை. நான் எந்த பொய்யும் சொல்லி இந்த வீட்டுக்குள் வரவில்லை என்று சொல்வாராம். உடனே விஜயா ரோகிணியை முறைத்து பார்க்க அவர் எதுவும் பேசாமல் கூனி குறுகி நிற்பாராம்.