சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மீனாவை வெறுப்பதால் ரோகிணியும் விஜயாவும் அவரை மட்டும் தட்டி பேசுகின்றனர். இதனால் மீனா யாரிடம் சொல்வது என்று தெரியாமல் பரிதவிக்கிறார். இப்படி இருக்கையில் சீரியலில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது விஜயா ரோகிணி இருவரும் மீனாவிடம் இனிமேல் எல்லா வேலையும் நீ தான் பாக்கணும் என்று சொல்லி சத்தம் போடுவார்களாம்.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் மீனாவை வாய்க்கு வந்தபடி தரக்குறைவாக பேசுவார்களாம். அந்த நேரத்தில் முத்து வந்து அதை கேட்டு விடுவாராம். இதனால் மீனா தினம் தினம் வீட்டில் எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பதை புரிந்து கொள்வாராம். அப்போது விஜயா மீனாவை நீ எதுக்கு இந்த வீட்ல இருக்கணும் என்று கேட்க உடனே முத்து அவ என்னோட பொண்டாட்டி இங்க தான் இருப்பா அதைக் கேட்க நீங்க யாரு என்பாராம்.
தீபாவளி பண்டிகை: சென்னை to நெல்லை சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கம்., தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!