சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் மனோஜ்க்கு வேலை போன விஷயம் தெரிந்து விஜயா புலம்பி கொண்டிருக்கிறார். மேலும் இந்த விஷயத்தை ரோகிணியிடம் சொல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கிறார். அந்த நேரத்தில் ரோஷிணி வர மனோஜிடம் என்ன சீக்கிரம் வந்துட்ட என்று கேட்க அவர் வேலை முடிந்து விட்டதாக சொல்கிறார். அப்போது அண்ணாமலை வர விஜயாவிடம் மதியம் எதுவும் சாப்பாடு பண்ணலையா. முத்து பசியோட வீட்டுக்கு வந்துருக்கான் என்று சொல்ல எனக்கு என்ன தெரியும் என விஜயா அசால்ட்டாக பதில் சொல்கிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
பின் அண்ணாமலை முத்துவுக்கு கால் பண்ணி சாப்டியா என்று கேட்க அவர் மீனா வீட்டில் சாப்பிட்டதாக சொல்கிறார். இதை கேட்ட விஜயா இவன் எதுக்கு அங்க போனா என்று சத்தம் போடுகிறார். அடுத்ததாக முத்து சவாரிக்கு கிளம்ப மீனாவின் வீட்டு வாசலில் சுதாகர் ஆள் இருப்பதை பார்த்து வெளியே சொல்லாமல் மறுபடியும் வீட்டுக்கு திரும்பி வருகிறார். இதை பார்த்து மீனாவின் அம்மா அதிர்ச்சியாகிறார். மேலும் மாப்பிள்ளை இங்கே இருக்கும் விஷயம் தெரிந்தால் விஜயா நிச்சயம் சண்டை போடுவார் என பயந்து கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.