மீனா மீது கொலை பழியை சுமத்தும் விஜயா.., நிற்க வைத்து கேள்வி கேட்கும் முத்து.., சிறகடிக்க ஆசை ப்ரோமோ!!!

0
மீனா மீது கொலை பழியை சுமத்தும் விஜயா.., நிற்க வைத்து கேள்வி கேட்கும் முத்து.., சிறகடிக்க ஆசை ப்ரோமோ!!!
மீனா மீது கொலை பழியை சுமத்தும் விஜயா.., நிற்க வைத்து கேள்வி கேட்கும் முத்து.., சிறகடிக்க ஆசை ப்ரோமோ!!!

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்தடுத்து மீனா செய்யாத தப்புக்கு விஜயாவிடம் திட்டு வாங்கிக் கொண்டு இருக்கிறார். இப்போது முத்துவும் மீனாவுக்கு சாதகமாக இல்லாததால் விஜயா வாய்க்கு வந்தபடி பேசுகிறார். இந்நிலையில் இப்போது வெளியாகிய ப்ரோமோவில் மீனா வீட்டில் உள்ள எல்லோருக்கும் சமைத்து வைத்துவிட்டு அண்ணாமலையிடம் வெளியே போவதாக சொல்லிவிட்டு கிளம்புகிறார். அந்த நேரத்தில் வீட்டுக்கு பார்வதி வர விஜயா அவருக்கு சாப்பாடு பரிமாறி விட்டு பாத்திரத்தை மூடாமல் சென்று விடுகிறார்.

இதனால் பல்லி உள்ளே விழுந்து விடுகிறது. அப்போது அண்ணாமலை சாப்பிட எல்லாம் எடுத்து வைக்க முத்து அந்த நேரத்தில் வருகிறார். பின் முத்து சாப்பாடு போடும் நேரத்தில் பல்லி இருப்பதை பார்த்து அண்ணாமலை சாப்பிடுவதை தட்டி விடுகிறார். அப்போது சாப்பாட்டில் பல்லி இருப்பதாக சொல்ல விஜயா அந்த நேரத்தில் வருகிறார். பின் முத்து அவரிடம் கேள்வி கேட்க எல்லாத்துக்கும் மீனா தான் காரணம் என அவர் மீது பழியை சுமத்துகிறார். அப்போது மீனாவிடம் முத்து இதெல்லாம் என்ன என்று கேட்க விஜயா எங்கள கொலை செய்ய பாக்குறியா என்ற சண்டை போடுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here