
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இப்பொழுது அனைவருமே எதிர்பார்த்திருந்த காட்சி அரங்கேறி விட்டது. அதாவது மனோஜ் கிட்டத்தட்ட மாட்டிக்கொள்ளும் சூழ்நிலை வந்த போது விஜயா எப்படியோ சமாளித்து விட்டார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படி இருக்க ரோகினிக்கு இன்னும் சந்தேகம் விடவே இல்லை. மேலும் அதனை தூண்டும் விதமாக முத்து பேசி கொண்டிருக்க இதனை ரோகினியால் எளிதாக விடவும் முடியவில்லை. இப்படி இருக்க இப்பொழுது முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது விஜயாவும், மனோஜ்-யும் பேசி கொண்டிருப்பதை ரோகினி கேட்டு விடுவாராம். இதனை நாள் பொறுமையாக இருந்த ரோகினியால் இந்த விஷயத்தை பொறுத்து கொள்ளவே முடியாதாம். திருடன் கிட்டவா இத்தனை நாள் வாழ்ந்தேன் என்று சண்டை போடுவாராம்.