
சிறகடிக்க ஆசை சீரியலில் இப்பொழுது மீனா ரவியின் திருமண விவகாரத்தால் எக்குத்தப்பாக மாட்டி கொண்டுள்ளார். என்ன தான் முத்து வெறுப்பை காட்டினாலும் மீனா மேல் இருக்கும் பாசம் கொஞ்சம் கூட குறையவே கிடையாது. அதுமட்டுமின்றி ரோகினி மாட்டிக்கொள்ளும் சூழ்நிலையும் வந்து விட்டது.
அதாவது PA மறுபடியும் வந்து மிரட்ட ஆரம்பித்து விட்டார். இதனை மீனா பின்னால் இருந்தும் பார்த்து விட்டார். ஆனால் அவருக்கு அது சரிவர புரியவும் இல்லை. இந்நிலையில் தற்போது முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது.

அதாவது, கூடிய சீக்கிரம் ரோகினி மீனாவிடமோ அல்லது முத்துவிடமோ மாட்ட போகிறாராம். அதை வைத்து தான் இனி வரும் கதை நகர உள்ளதாம். ரோகினியின் தண்டவாளம் தெரிந்தால் கண்டிப்பாக விஜயாவிற்கு பெரிய ஷாக்கை கொடுக்கும்.