ரோகினி தலையில் இடியை இறக்கிய விஜயா.., முத்துவின் மாஸ்டர் பிளான்.., அம்பலமாகும் சதி திட்டம்!!!

0

சிறக்கடிக்க ஆசை சீரியலில் இப்போது அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து கொண்டே உள்ளது. ஒரு பக்கம் நடந்த விஷயம் என்னவென்று தெரியாமல் மீனா முத்து மீது கோபப்படுகிறார். இன்னொரு பக்கம் மனோஜ்க்கு மீண்டும் வேலை போன விஷயம் தெரிந்து ரோகினி கடுப்பாகிறார். இப்படி இருக்கையில் மனோஜ் ஒரு இடத்தில் இன்டர்வியூக்கு செல்கிறார். பின் வீட்டுக்கு வரும் மனோஜிடம் விஜயா, ரோகினி இருவரும் வேலை கிடைத்து விட்டதா என்ன கேட்கின்றனர். அப்போது அவர் கனடாவில் வேலை கிடைத்திருப்பதாக சொல்கிறார். இதை கேட்டு ரோகினி மிகவும் சந்தோஷப்படுகிறார். ஆனால் கடைசியில் மிகப்பெரிய குண்டை தூக்கிப் போடுகிறார். அதாவது 14 லட்சம் கட்டினால் நிச்சயம் வேலை கிடைத்து விடும் என்று சொல்கிறார். இதை கேட்டு முத்து, அண்ணாமலை இருவரும் சிரிக்கின்றனர்.

தமிழக ரயில் பயணிகளே., இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் சேவை மாற்றம்., தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

இப்படி இருக்கும் சூழ்நிலையில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது விஜயா ரோகினியிடம் உங்க அப்பா நினைச்சா 14 லட்சம் என்ன எவ்வளவு வேண்டுமானாலும் பணம் கொடுக்கலாம். நீ உங்க அப்பா கிட்ட கேளு ரோகினி என்று சொல்வாராம். இதை கேட்டு ரோகினிக்கு தலையில் இடி விழுந்தது போல் இருக்குமாம். மேலும் ஏற்கனவே ரோகினி மீது சந்தேகத்தில் உள்ள முத்து இந்த பணத்தை எப்படி ரெடி பண்ணுகிறார் என்பதை பார்க்க அவர் கண்காணிப்பாராம். அப்போதுதான் ரோகினியின் முழு பித்தலாட்டத்தனமும் முத்துவுக்கு தெரிய வருமாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here