இப்படி மாட்டிக்கிட்டீங்களே.., முத்துவிடம் வசமாக சிக்கிய ரோகினி.., வெளிவரும் உண்மையால் ஆடிபோன குடும்பத்தினர்!!!!

0
சிறகடிக்க ஆசை சீரியலில் ஒரு வழியாக மனோஜ் ஹோட்டலில் சர்வர் வேலைக்கு சேர்கிறார். ஆனால் இந்த வேலையும் இவருக்கு நீடிப்பதாக தெரியவில்லை. இன்னொரு பக்கம் ரோகினி அடுத்தடுத்து பல விஷயங்களில் முத்துவிடம் சிக்கிக் கொண்டே இருக்கிறார். ஏற்கனவே பார்லரை விற்ற விஷயம் தெரிந்து முத்து இன்னும் யாரிடமும் சொல்லாமல் இருக்கிறார். இப்போது இதைத் தொடர்ந்து அடுத்த ஒரு விஷயத்தில் சிக்கியுள்ளார். அதாவது ரோகினி தனது தோழியுடன் போனில் பேசிக் கொண்டிருப்பாராம்.
அதாவது எப்படியோ மலேசியா மாமாவை வைத்து இப்போதைக்கு ஒரு பிரச்சனையை சரி பண்ணியாச்சு. ஆனால் அந்த ஆள் இனி யாரிடமும் மாட்டக்கூடாது என பேசி கொண்டிருப்பாராம். இதை முத்து கேட்டு விடுவாராம். மேலும் அவர்கள் பேசுவதை கவனிக்கும் போது தான் அந்த ஆள் மலேசியாவும் கிடையாது. ரோகினியின் மாமாவும் கிடையாது என்ற விஷயம் முத்துவுக்கு தெரியவருமாம். பின் முத்து செல்வத்தின் உதவியுடன் அந்த ஆளை கண்டுபிடிப்பாராம். மேலும் இந்த உண்மையை அறிந்து வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சியாவார்களாம். இதுதான் அடுத்து வரும் எபிசோடில் அரங்கேறுமாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here