விஜய் டிவியில் ஒளிபரப்பான சில மாதங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விட்டது சிறகடிக்க ஆசை சீரியல். மேலும் நாளுக்கு நாள் இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதன் படி கடந்த எபிசோட்டில் காணாமல் போன பணம் மனோஜ் தான் திருடினார் என முத்து கண்டுபிடித்துவிட்டார். ஆனால் தன் மகனை காப்பாற்றுவதற்காக, நான் தான் மனோஜுக்கு பணம் கொடுத்தேன் என விஜயா பொய் சொல்கிறார். மேலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாத முத்துவுக்கு மனோஜ் மீது சந்தேகமாகவே இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால் மீனாவிடம், தன்னுடைய அம்மா அவ்வளவு எளிதில் பணத்தை கொடுக்கும் ஆள் கிடையாது. மேலும் மனோஜ் தான் ஏதோ பிராடு வேலை செய்திருக்கிறான் என கூறுகிறார். மேலும் மனோஜ் தான் பணத்தை எடுத்தான் என்று உண்மை தெரிய வந்தால், அப்போ மனோஜுக்கு இருக்கு என கோபமாக கூறுகிறார். இதையெல்லாம் ரூமுக்கு வெளியில் நின்று கொண்டிருக்கும் ரோகினி கேட்டு கொண்டிருக்கிறார். இதனால் மனோஜ் மீது ரோகினிக்கு சந்தேகம் வருகிறது. இதை வைத்து பார்க்கும்போது மனோஜ் கையும் களவுமாக ரோகினியிடம் சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குணசேகரன் கதாபாத்திரத்திற்கு இவரு கன்பார்ம் ஆகிட்டாரா?? எதிர்நீச்சல் சீரியல் குறித்த நியூ அப்டேட்!!