
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்சிறகடிக்க ஆசை சீரியல் கொஞ்சம் கூட விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. மேலும் நாளுக்கு நாள் இந்த சீரியலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, டிஆர்பியில் முன்னேற்றம் காட்டி வருகிறது. தற்போது இதில் எக்கசக்க சூழ்ச்சி வேலைகளை செய்த ரோகிணி ஒருவழியாக மனோஜை திருமணம் செய்து கொண்டார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
ஆனால் ரோகிணி திருமணமாகி வந்ததிலிருந்து முத்துவுக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருகிறது. இதுபோக ரோகிணிக்கு கால் செய்த அவரது அம்மா கல்யாணி என அழைக்க அதை கேட்ட விஜயாவுக்கு சிறிய சந்தேகம் ஏற்படுகிறது. ஆனால் அதை ரோகிணி சமாளித்து விடுகிறார்.
இப்படி இருக்கையில் ரோகிணியின் அம்மா ரோட்டில் மயங்கி கிடக்கிறார். அதை பார்த்த முத்துவும் மீனாவும் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதையடுத்து ரோகிணியின் அம்மா தான் புஷ்பா என மீனாவுக்கு வரும் எபிசோடுகளில் தெரியவருமாம். இதுபோக ரோகிணியின் உண்மையான பெயர் கல்யாணி என மீனாவுக்கு தெரிய வருகிறது. இதனால் வீட்டுக்கு வந்த மீனா இவர் பெயர் ரோகிணியே கிடையாது, இவர் ஒரு பிராடு என விஜயாவிடம் கூறுவாராம். இதைக் கேட்ட ரோகிணி அதிர்ச்சியாவாராம்.