சென்னைவாசிகளுக்கு குட் நியூஸ்., பஸ், மின்சார ரயில், மெட்ரோவில் பயணம் செய்ய ஒரே இ-டிக்கெட்!! வெளிவந்த முக்கிய தகவல்!!!

0
சென்னைவாசிகளுக்கு குட் நியூஸ்., பஸ், மின்சார ரயில், மெட்ரோவில் பயணம் செய்ய ஒரே இ-டிக்கெட்!! வெளிவந்த முக்கிய தகவல்!!!
சென்னைவாசிகளுக்கு குட் நியூஸ்., பஸ், மின்சார ரயில், மெட்ரோவில் பயணம் செய்ய ஒரே இ-டிக்கெட்!! வெளிவந்த முக்கிய தகவல்!!!

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பொதுமக்கள் போக்குவரத்து பயணங்களை எளிய முறையில் மேற்கொள்ள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட 3 பயணங்களுக்கும் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்க வழிவகைகளை சென்னை போக்குவரத்து குழுமம் ஏற்படுத்தி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

முதற்கட்டமாக ஒரே இ-டிக்கெட் மூலம் மாநகர பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்படியான வசதி இந்தாண்டு இறுதிக்குள் மேற்கொள்ளப்படும். இதன் பின்னர் அடுத்த 3 மாதங்களில் புறநகர் ரயில் பயண வசதியும் இந்த ஒரே இ-டிக்கெட் மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கட்டண விபரம், டிராவல் டைம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பயணிகள் செயலி மூலம் சரிபார்த்த பிறகு இ-டிக்கெட் வழங்கும் முறை செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 – என்னென்ன அறிவிப்புகள்?? Live Update

இந்த இ-டிக்கெட்டில் உள்ள QR code-ஐ போக்குவரத்துகளில் ஸ்கேன் செய்யும் வசதியுடன் வடிவமைக்கப்பட உள்ளது. எனவே இந்த திட்டப்பணிகளை ஒன்றிய அரசின் CDSC நிறுவனம் மற்றும் சென்னை ஐஐடி நிர்வாகமும் இணைந்து மேற்கொள்ள உள்ளனர். இதன்மூலம் போக்குவரத்து பயணிகள் பயன்பெறும் பட்சத்தில் ஓலா, ஊபர் உள்ளிட்ட வாடகை வாகனங்களிலும் இந்த வசதி மேம்படுத்தப்படும் என சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here