
ஜீ தமிழிலின் ‘சரிகமப’ இசை நிகழ்ச்சி கடந்த 3 வருடங்களாக ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பிரபல பின்னணி பாடகர்களான சீனிவாசன், கார்த்திக், விஜய் பிரகாஷ் ஆகியோர் நடுவர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான promo இணையத்தில் வெளியாகியுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த சுற்றுக்கு பிளாக் & ஒயிட் என்ற பெயரிடப்பட்டுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூரி, கார்த்திக் ராஜ், பாடகர் யுகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் படத்தினை promotion செய்தனர். இன்னும் இந்த சுற்றை சிறப்பித்து கொடுக்க பத்மஸ்ரீ சுசீலா அம்மா அவர்கள் இதில் பங்கேற்றுள்ளார். அப்போது இவர் பாடிய பாடல் ஒன்றை போட்டியாளர் லக்ஷனா பாடியுள்ளார்.
நடிகை சுகன்யா நியாபகம் இருக்கா?? கணவருடன் எப்படி இருக்காங்க தெரியுமா?? வைரலாகும் பேமிலி புகைப்படம்!!
அவர் பாடுவதை கேட்ட சுசீலா அம்மா கொடுத்த கமெண்ட் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சி படுத்தியுள்ளது. அதாவது என்ன இந்த பொண்ணு என்ன மாதிரியே பாடுறா., நான் வேண்டுமென்றால் வெளியே போகவா என்று கேட்டுள்ளார். இதை கேட்டு அங்கிருந்தவர்கள் ஷாக் அடைந்த நிலையில், நான் கூட இந்த பாடலை இவ்வளவு அழகாக பாடவில்லை என கூறி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.