பாடகராக இருந்த சித் ஸ்ரீராமுக்கு கிடைத்த சூப்பர் ப்ரோமோஷன் – குஷியில் துள்ளும் ரசிகர்கள்!!

0

பிரபல இளம் பாடகரான சித் ஸ்ரீராம் பற்றிய முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த அப்டேட்டை கேட்ட அவரது ரசிகர்கள் பலரும் குஷியில் உள்ளனர்.

சித் ஸ்ரீராம்:

சித் ஸ்ரீராம் பாடலுக்கு மயங்காதவர்கள் என யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு தான் பாட்டால் ரசிகர்களை கட்டிப் போட்டவர். மேலும் இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தில் ‘அடியேய்’ பாடலை மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இதுதான் இவர் தமிழில் பாடிய முதல் பாடலும் கூட. இவர் இந்திய அமெரிக்க இசை கலைஞர் மற்றும் கர்நாடக இசையில் வல்லவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மணிரத்னம் தயாரிப்பில் வெளிவந்த வானம் கொட்டட்டும் என்ற படத்தில் இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை முடித்து விட்டு இயக்குனர் மணிரத்னம் அடுத்தாக எடுக்க இருக்கும் படத்தில் சித் ஸ்ரீராமை ஹீரோவாக நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்திற்கான கதையை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதி வருவதாக கூறி வருகின்றனர். இந்த அப்டேட்டை கேட்டு பலரும் குஷியில் உளளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here