பாடகி ஸ்ரேயா கோஷல் வீட்டில் நடந்த விசேஷம் – குவியும் வாழ்த்துகள்!!

0

பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷல் தற்போது கர்பமாக உள்ளார். இதனை அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். தற்போது அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமாக இருந்து வருகிறது.

ஸ்ரேயா கோஷல்:

சினிமா உலகில் பிரபல பாடகியாக வலம் வருபவர் தான் ஸ்ரேயா கோஷல். இவர் கடந்த 2002ம் ஆண்டு முதல் திரையுலகில் அறிமுகமானார். இவரது பாடலுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். மேலும் தனது குரல் மூலம் பல ரசிகர்களை தன் பக்கம் கட்டி வைத்துள்ளார் ஸ்ரேயா கோஷல். இவர் இதுவரை நான்கு முறை தேசிய விருதுகளையும், பிலிம் பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் தமிழ், மலையாளம் என அனைத்து இந்திய மொழிகளிலும் பாடி வருகிறார். இவர் கடந்த 2015ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் இவர் திரையுலகில் செம பிஸியாக இருந்து வருகிறார். மேலும் தமிழ் சினிமாவில் இளையராஜா, இமான், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அனிருத் போன்ற இசையமைப்பாளர்களுடன் இணைந்தும் வேலை செய்துள்ளார்.

தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் – தீவிர சோதனையில் பாதுகாப்பு படை!!

தற்போது இவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் தெரிவித்ததாவது, தான் கர்பமாக உள்ளேன் என்று தெவித்து தனது புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். தற்போது திரை உலகினர் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here