பாடகி லதா மங்கேஷ்கருக்கு தீவிர சிகிச்சை – மருத்துவ அறிக்கை வெளியீடு!!

0

இந்திய சினிமாவின் முன்னணி பாடகியாக இருந்தவர் லதா மங்கேஷ்கர்.கொரோனா தொற்றுக்கு ஆளான இவரை கடந்த சனிக்கிழமை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதை தொடர்ந்து அங்கு உள்ள மருத்துவர்கள் லதா உடல்நலம் குறித்த அறிவிப்பை வெளியுட்டுள்ளனர்.

லதா மங்கேஷ்கர்:

இந்தியாவின் இசைக்குயில் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் பாடகி லதா மங்கேஷ்கர். இவர் இந்தியாவில் தமிழ், இந்தி, மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார்.மேலும் இவரை பெருமை படுத்தும் விதமாக இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா, பத்ம பூஷன் விருதுகளை கொடுத்து உள்ளது. இந்த நிலையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் இவருக்கு நிமோனியா காய்ச்சல் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 92 வயதான லதா மங்கேஷ்கர் இன்னும் 10 அல்லது 15 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் இவரின் தங்கையான உஷா மங்கேஷ்கர் கூறும் போது வயது முதிர்வு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாடகி லதா மங்கேஷ்கர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும், அவர் தற்போது நலமுடன் உள்ளதாகவும், மேலும் இந்த தொற்றில் இருந்து மீண்டு வர லதா மங்கேஷ்கருக்காக பிரார்த்தியுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here