முதன் முதலாய்….,அனிருத்திற்காக பிரபல பாடகி செய்த விஷயம்…,

0
முதன் முதலாய்....,அனிருத்திற்காக பிரபல பாடகி செய்த விஷயம்...,
முதன் முதலாய்....,அனிருத்திற்காக பிரபல பாடகி செய்த விஷயம்...,

தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் செட்டிங் பாடல்களை பாடி மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாடகி தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகளான பாடகி தீ தனது அப்பா இசையில் ‘பீட்சா 2’ படத்திற்காக ஒரு பாடலை பாடி சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து, தனது மயக்கும் குரலால் ‘நீ நான்’ (மெட்ராஸ்), ‘ஏ சண்டைக்காரா’, ‘கண்ணம்மா கண்ணம்மா’, ‘ரவுடி பேபி’ போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார் தீ.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இருக்க, இதுவரை சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா மற்றும் ஜி.வி.பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்களுக்கு மட்டும் பாடி வந்த தீ இப்போது முதல் முறையாக அனிருத் இசையில் ‘ஜெயிலர்’ திரைப்படத்திற்காக ஒரு பாடலைப் பாடி இருக்கிறார். அந்த வகையில், தீ குரலில் இன்று வெளியாகி இருக்கும் ‘ஜுஜுபி’ பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here