பாதிக்கப்படுமா இந்தியா – சிங்கப்பூர் நட்பு – டெல்லி முதல்வரின் சர்ச்சை கருத்திற்கு அந்நாட்டு அரசு கடும் எதிர்ப்பு!!

0

சிங்கப்பூரில் புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதால் சிங்கப்பூர் மற்றும் இந்தியா இடையேயான விமான சேவைக்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார். இதற்கு சிங்கப்பூர் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் உருமாறிய கொரோனா வைரஸின் புதிய வகை தற்போது பரவி வருகிறது. இது சம்மந்தமாக கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் சில வகைகள் வேகமாகப் அந்நாட்டில் பரவுவதாகவும், அவை குழந்தைகளை அதிகம் தாக்குவதாகக் கூறப்படுவதால் அடுத்து வரும் நாட்களில் நமது நடமாட்டத்தை கணிசமான அளவு குறைத்துக்கொள்ள வேண்டும் என சென்ற வாரம் அந்நாட்டின் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிறகு இது பற்றி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா வைரஸ் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பெரும்பாலான நாடுகளில் மூன்றாவது அலையை கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிய வைரஸ் பரவி வருவதால் சிங்கப்பூரில் இருந்து விமானங்களை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இந்த கருத்திற்கு சிங்கப்பூர் அரசு இந்திய உயர் ஸ்தானிகரை அழைத்து ஆட்சேபனை தெரிவித்து உள்ளது.

சிங்கப்பூர், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் வெற்றிகரமான நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. தற்போது அந்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் விமான போக்குவரத்தை நிறுத்துமாறு பேசிய டெல்லி முதல்வரின் கருத்திற்கு சிங்கப்பூர் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here