அஜித்தை போலவே சால்ட் அண்ட் பெப்பருக்கு மாறிய சிம்ரன் – வைரலாகும் புகைப்படம்!!

0

தமிழ் திரையுலகில் 90ஸ் கிட்ஸின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். அந்த காலத்திலேயே திரையுலகை ஒரு கலக்கு கலக்கியவர் இவர். தற்போது அஜித்தை போலவே தனது ட்விட்டர் பக்கத்தில் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

சிம்ரன்

பஞ்சாபி பெண்ணான சிம்ரன் மாடலிங் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். ஆரம்பத்தில் இவர் ஹிந்தி படங்களில் தான் நடிக்க ஆரம்பித்தார். ஒரு ஷோவில் தொகுப்பாளினியாக இருந்த இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. இவரின் எதார்த்த நடிப்புக்கும் அழகுக்கும் படவாய்ப்புகள் குவிந்தன.

தமிழில் 1997 இல் வெளியான வி.ஐ.பி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் சிம்ரன். அதற்கு அடுத்து நேருக்கு நேர் என்ற படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருப்பார். இப்பொழுது வரை சிம்ரனை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். நடிப்பில் மட்டுமல்ல டான்சிலும் புலி தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நடிகர்களுக்கு இணையாக நடனமாடுவார். ஒரு ஷோவில் கூட விஜய் சொல்லி இருப்பார். சிம்ரன் அளவிற்கு யாராலும் நடனமாட முடியாது என்று. மேலும் விஜய்க்கு பிடித்த நடிகை என்றாலும் அது சிம்ரன் தானாம். விஜயும் சிம்ரனும் இணைந்து நிறைய படங்களில் நடித்திருந்தனர்.

சிம்ரன் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளத்திலும் முன்னணி நடிகை தான். இப்பொழுது சிம்ரன் இருந்து இருந்தால் கூட அவர் தான் அனைத்து திரையுலகிலும் கிங் என்றே சொல்லலாம். மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் அவர் நடித்த ‘வாரணம் ஆயிரம்’ நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் கொடுத்த ரீஎன்ட்ரி என்றே சொல்லலாம். அதுவுமே செம ஹிட்.

அதன் பிறகு சீமா ராஜா திரைப்படத்தில் மாறுபட்ட விதமாக வில்லியாக நடித்திருப்பார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அந்த படம் ஹிட் கொடுக்கவும் இல்லை. இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தல அஜித் ஸ்டைலில் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ரில் தோற்றமளிக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here