வெந்து தணிந்தது காடு.,சிம்பு நடிப்புக்கு ஒரு மாலைய போடு – படத்தின் முழு திரை விமர்சனம் இதோ!!

0
வெந்து தணிந்தது காடு.,சிம்பு நடிப்புக்கு ஒரு மாலைய போடு - படத்தின் முழு திரை விமர்சனம் இதோ!!

சிம்பு நடிப்பில், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் முழு திரை விமர்சனம் இதோ..

முழு விமர்சனம் :

நடிகர் சிம்பு தனது மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் கௌதம் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்த திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. சாதாரண கிராமத்தில், முத்து என்ற பெயரில் அம்மா ராதிகா மற்றும் தங்கையுடன் வயக்காட்டில் வேலை செய்து வருபவர் சிம்பு.

ஒரு கட்டத்தில் விபத்து ஏற்பட்டு, முத்து மிகவும் கஷ்டப்படுகிறார். இதனால் அவரது அம்மா ராதிகா, தனது உறவினர் உதவியுடன் சிம்புவை மும்பையில் ஒரு ஹோட்டல் கடைக்கு வேலைக்கு அனுப்புகிறார். ஹோட்டல் வேலை செய்யும் சிம்பு, எதிர்பாராத விதமாக கேங்ஸ்டர் கும்பலில் சேர்கிறார். இறுதியில் அவர் வாழ்க்கை என்ன ஆனது? என்பதை இந்த படத்தின் மீதி கதை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

முதல் பாதியில் விளையாட்டுப் போக்காக இருந்த சிம்பு அடுத்த பாதையில், வெறித்தனம் செய்து விட்டார். ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை நடிகை சித்தி இதானி கொடுத்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், காதல் காட்சியில் கலக்கிய இந்த திரைப்படம் 5க்கு 3.75 மதிப்பெண்களை பெற்றுள்ளது. மொத்தத்தில் வெந்து தணிந்தது காடு, பட வெற்றிக்கு வெடிய போடு என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here