வித்தியாசமான சிம்பிள் தறிவாளா சிக்கன் ரெசிபி…!இன்னிக்கே வீட்டில செஞ்சு பாருங்க!!!

0
வித்தியாசமான சிம்பிள் தறிவாளா சிக்கன் ரெசிபி...!இன்னிக்கே வீட்டில செஞ்சு பாருங்க!!!
வித்தியாசமான சிம்பிள் தறிவாளா சிக்கன் ரெசிபி...!இன்னிக்கே வீட்டில செஞ்சு பாருங்க!!!

அசைவ உணவுகள் என்று சொல்லும் போதே அனைவர் நாவில் எச்சில் ஊறும். அந்த அளவுக்கு அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு வகை. அதிலும் வெறும் பிரியாணி, குழம்பு, கிரேவி என அரைத்த மாவையே அரைக்காமல் கடாய் சிக்கன், சிக்கன் டிக்கா போன்ற விதவிதமான டிஸ்களே அனைவரும் விரும்புகின்றனர். அப்படிப்பட்ட ஒரு டிஷ் தான் நாம் இந்த பதிவில் காண உள்ளோம். அதாவது இந்த பதிவின் மூலம் தறிவாளா சிக்கன் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1/2 கிலோ

வெங்காயம் – 1

தக்காளி – 2

தயிர் – 1/2 கப்

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

மல்லி தூள் – 1 தேக்கரண்டி

சீரக தூள் – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

மிளகு தூள் – 1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் -தேவையான அளவு

வித்தியாசமான சிம்பிள் தறிவாளா சிக்கன் ரெசிபி...!இன்னிக்கே வீட்டில செஞ்சு பாருங்க!!!
வித்தியாசமான சிம்பிள் தறிவாளா சிக்கன் ரெசிபி…!இன்னிக்கே வீட்டில செஞ்சு பாருங்க!!!

செய்முறை

முதலில் சிக்கனை நன்கு கழுவி அதில் தயிர், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு மற்றும் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும். இந்த சிக்கன் கலவையை 30 நிமிடத்திற்கு ஊறவைக்கவும். அதன் பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுத்து அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்னர் அதே கடாயில் சிக்கன் கலவையை சேர்த்து வதக்கவும், மேலும் அதோடு சேர்த்து மிளகாய் தூள், மல்லி தூள்,சீரக தூள்,கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி கொள்ளவும். அதன் பிறகு சிறிது தண்ணீர் தெளித்து, எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை கிளறி கொள்ளவும். அதன் பின்னர் வறுத்து வைத்து உள்ள வெங்காயத்தை சேர்த்து 5 முதல் 6 நிமிடங்கள் வரை வேக வைத்து கொள்ளவும். தற்போது சுவையான தறிவாளா சிக்கன் ரெடி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here