‘இங்க எவன் வாழனும், எவன் ஆளனும்னு நான் தான் முடிவு பண்ணனும்’…,’பத்து தல’ ட்ரைலர் ரிலீஸ்…,

0
'இங்க எவன் வாழனும், எவன் ஆளனும்னு நான் தான் முடிவு பண்ணனும்'...,'பத்து தல' ட்ரைலர் ரிலீஸ்...,
'இங்க எவன் வாழனும், எவன் ஆளனும்னு நான் தான் முடிவு பண்ணனும்'...,'பத்து தல' ட்ரைலர் ரிலீஸ்...,

நடிகர் சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரைலர் ரிலீஸ்

இயக்குனர் என்.கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’. ஆக்ஷன் த்ரில்லர் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக், கவுதம் வாசுதேவ் மேனன், நடிகை ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த வகையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், படத்தின் ட்ரைலரும் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த ட்ரைலரில், ஒரு மாநிலத்தின் முதல்வர் காணாமல் போகிறார். அவரை, காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கு பின்னால் ஒரு அரசியல்வாதி இருப்பது போல காட்சிகள் துவங்குகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்…..,ரசிகர்கள் உற்சாகம்….,

மறுபக்கத்தில், சட்ட விரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் AGR, அதாவது நடிகர் சிம்புவை தடுக்க அரசியல்வாதியான கவுதம் வாசுதேவ் மேனன் முயற்சிக்கிறார். மறுபக்கத்தில், AGRஐ தீர்த்துக் கட்ட கவுதம் கார்த்திக் முயல்கிறார். இதற்கிடையில், சிம்புவுக்கு ஒரு காதல் மற்றும் எமோஷனல் கதை ஒன்றும் இடம்பெறுகிறது. இப்படி, ஒரு நிழல் உலக தாதா, போலீஸ், அரசியல்வாதி இவர்களுக்கு இடையே நடக்கும் சண்டையுடன் மாஸாக வெளியாகி இருக்கிறது ‘பத்து தல’ திரைப்படத்தின் ட்ரைலர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here