‘பத்து தல’ படத்தின் பாடல் அப்டேட்…, நாளை மாலை வெளியீடு…,

0
'பத்து தல' படத்தின் பாடல் அப்டேட்..., நாளை மாலை வெளியீடு...,
'பத்து தல' படத்தின் பாடல் அப்டேட்..., நாளை மாலை வெளியீடு...,

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் நாளை வெளியாக இருக்கிறது.

பாடல் வெளியீடு

நடிகர் சிம்பு, கவுதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’. ஆக்ஷன் திரில்லர் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை என்.கிருஷ்ணா இயக்கியுள்ளார். ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிம்பு நடித்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதன்படி, ‘பத்து தல’ திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்திருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

‘தளபதி 67’ திரைப்படத்தில் இணைந்த பிரபலங்கள்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது….,

இதை தொடர்ந்து, இந்த திரைப்படத்தின் முதல் பாடல் அப்டேட் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் நடிகர் சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ திரைப்படத்தின் முதல் பாடலுக்கான அறிவிப்பு நாளை மாலை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலுக்கான அப்டேட் நாளை 5.04 மணிக்கு ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here