சிம்புவின் திருமணத்திற்காக ஊர் ஊராக போகும் டி. ராஜேந்தர் – கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கிய குடும்பம்!!

0
சிம்புவின் திருமணத்திற்காக ஊர் ஊராக போகும் டி. ராஜேந்தர் - கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கிய குடும்பம்!!

நடிகர் சிம்புவுக்கு தற்போது 39 வயது ஆகி உள்ள நிலையில், விரைவில் அவருக்கு திருமணம் செய்து வைக்க  அவரது வீட்டார் தீவிரமாக அவருக்கு பெண் பார்த்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

வைரல் அப்டேட்:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு. இவர் தனது மாநாடு படத்தின் மூலம், மீண்டும் மிகப்பெரிய என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில், சிம்புவின் அப்பாவான டி. ராஜேந்தர், எப்போது பிரஸ் மீட் வைத்தாலும் நிருபர்கள் அவரிடம் கேட்கும் ஒரே கேள்வி சிம்புவுக்கு எப்போது திருமணம் என்பதுதான்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

திருமணத்துக்கு தயாரான சிம்பு - காதலுக்கு பச்சை கொடி காட்டிய டி.ஆர்! பொண்ணு யாருன்னு நீங்களே பாருங்க!!

இதையடுத்து, சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தார் முழுமூச்சாக இறங்கியுள்ளனர். அவரது தந்தை டி ஆர்,  தனது சொந்த ஊரான மயிலாடுதுறையில் அவருக்கு பெண் தேட ஆரம்பித்துள்ளார். அதேபோல் சிம்புவின் அம்மா மற்றும் தங்கை இருவரும் 2 வாரங்களுக்கு ஒரு முறை, மயிலாடுதுறை சென்று பெண் தேடி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால், அடுத்த வருடத்திற்குள் சிம்புவிற்கு திருமணம் முடியலாம் என பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here