சிம்புவின் “மாநாடு” படத்தின் மாஸ் அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

முன்னணி நடிகர் சிம்பு நடிக்கும் “மாநாடு” திரைப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் ஆகும் தேதி குறித்து தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் அந்த பாடலை எதிர்பார்த்து வருகின்றனர்.

சிம்புவின் “மாநாடு” திரைப்படம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மிகவும் அதிகமாக உடல் எடை அதிகரித்ததால் அனைவரும் அவரை கிண்டல் செய்து வந்தனர். தற்போது அனைவருக்கும் பதிலடி கொடும் வகையில் மிகவும் ஸ்லிம்மாக மாறி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

‘தமிழகத்திற்கு 20 லட்ச தடுப்பூசிகள் உடனே வேண்டும்’ – பிரதமருக்கு முதல்வர் கடிதம்!!

இவரது “ஈஸ்வரன்” திரைப்படம் கடந்த பொங்கலுக்கு திரை அரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றது. இப்படியாக இருக்க, தற்போது இவரது ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து வரும் திரைப்படம் என்றால் அது “மாநாடு” திரைப்படம் தான். இயக்குனர் வெங்கட் பிரபு இந்த திரைப்படத்தினை இயக்கி வருகிறார். அதே போல் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் பிரஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பாக வெளியானது. பிரஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் சற்று வித்தியாசமாக இருந்ததால், படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இப்படியாக இருக்க, இந்த திரைப்படத்தின் முதல் பாடல் ரம்ஸான் அன்று வெளியாக உள்ளது, அதாவது மே 14 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த பாடலுக்காக தற்போதிலிருந்து எதிர்பார்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here