ஹாலிவுட்டின் இந்த படமும் சிம்புவின் மாநாடு படம் ஒண்ணா ??? – கிசுகிசுக்கப்படும் புதிய தகவல் !!!

0

சிம்புவின் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அடுத்த படம் மாநாடு. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி அதை தொடர்ந்து படப்பிடிப்புகளுக்கான வேலைகள் தொடங்கபட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படமானது Source Code என்ற ஹாலிவுட் படம் போல உள்ளது என சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிம்புவின் மாநாடு

சிம்புவின் படங்கள் முன்பு போல் இன்று அதிக வரவேற்பையோ வசூல் சாதனையோ செய்வதில்லை. இருப்பினும் அவருக்கான ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில் தற்போது அவர் நடிப்பில் உருவாகும் மாநாடு படம் அவர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.மேலும் இதில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், மனோஜ், கருணாகரன், பிரேம்ஜி உட்பட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்து உள்ளனர்.

மேலும் இந்த கூட்டணிக்கு பலம் சேர்க்கும் வகையில் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இதற்கான டீசர் சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது. இந்த டீசர் மூலம் இது முற்றிலும் மாறுபட்ட கதை களம் கொண்டது எனவும், அரசியல் சம்பந்தப்பட்ட கதை போலவும் தோன்றியது.

இதனையடுத்து, தற்போது அந்த படம் பற்றிய ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது,சில வருடங்களுக்கு முன்பு வெளியான Source Code எனப்படும் ஹாலிவுட் படம் போல இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது அந்த படம் வெளியான பிறகே தெரியவரும். அதுவரை படத்தை எதிர்பார்த்து காத்திருப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here