‘சினிமா துறையில் வெற்றியடைந்ததற்கு முழுக்க முழுக்க எனது பெற்றோரே காரணம்’ – பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிம்பு புகழாரம்!!

0

நடிகர் சிம்புவின் கலை திறனை கௌரவப்படுத்தும் விதமாக வேல்ஸ் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. பட்டமளிப்பு விழாவில் சிம்பு இந்த பட்டம் கிடைத்ததற்கு எனது தாய் தந்தை தான் காரணம் என அவர்களை புகழ்ந்து பேசியுள்ளார்.

பட்டமளிப்பு விழாவில் சிம்புவின் உரை

ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குபவருக்கு ஒவ்வொரு வருடமும் அவர்களை கௌரவித்து டாக்டர் பட்டம் வழங்குவது வழக்கம். இந்த ஆண்டில் சினிமா துறையில் மட்டும் அல்லாமல் இசை, இயக்கம், பாடகர், பாடலாசிரியர் என அனைத்து துறையிலும் சிறந்து விளங்கியதால் நடிகர் சிம்புவிற்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் மற்றும் தாய் உஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அந்த விழாவில் சிம்பு திரைப்படத்தின் வெற்றி குறித்து சில வரிகள் பேசியுள்ளார். இந்த டாக்டர் பட்டம் கிடைத்ததற்கு முழுக்க முழுக்க என் அப்பா அம்மா தான் காரணம். இந்த விருது என்னுடையது கிடையாது இந்த விருதை எனது தாய் தந்தைக்கு சமர்பிக்கிறேன். 9 மாத குழந்தையில் இருந்து என்னை நடிக்க வைத்து ஊக்கப்படுத்தினார்கள். சினிமாவில் இவ்வளவு தூரம் பயணம் செய்துள்ளேன் என்றால் அதற்கு இவர்களே காரணம். இப்படி ஒரு அம்மா அப்பா அடுத்த ஜென்மத்தில் எனக்கு கிடைப்பார்களா தெரியவில்லை என நெகிழ்ந்து பேசியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here