சமீபத்தில் நடந்து முடிந்த சைமா விருது வழங்கும் விழாவில் நடிகை அதிதி சங்கருக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற விருது வழங்கப்பட்டது. இதற்கு அவருடைய ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் சில கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதாவது அதிதி சங்கர் சினிமாவில் நுழைந்த சமயத்தில் தான் லவ் டுடே இவானாவும் நுழைந்தார். இவர் நடித்த நாச்சியார் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதில் கிராமத்து பெண்ணாக இவானா நடித்திருப்பார். அதே போல் தான் விருமன் படத்தில் அதிதி ஷங்கர் கிராமத்து பெண்ணாக நடித்திருப்பார். ஆனால் இரண்டு படங்களையும் ஒப்பிட்டு பார்த்தால் நாச்சியார் படத்தில் இவானாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் எப்படி அதிதி சங்கருக்கு அறிமுக நடிகை விருது வழங்கப்பட்டது என்று நெட்டிசன்கள் பலரும் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
Siima Award 2023.., விருதுகளை குவித்த முக்கிய பிரபலங்கள் – முழு லிஸ்ட் இதோ!!