அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7 வது ஊதிய பரிந்துரையின் கீழ் ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படியை மத்திய மற்றும் மாநில அரசுகள் உயர்த்தி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு, கடந்த மார்ச் மாதத்தில் அறிவித்ததை அடுத்து, மற்ற மாநில அரசுகளும் அடுத்ததடுத்து அறிவித்தனர். இதையடுத்து, ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில், சிக்கிம் மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை தற்போது அறிவித்துள்ளார். அதாவது, “சிக்கிம் அரசு ஊழியர்களுக்கு இதுவரை 38%- மாக இருந்த அகவிலைப்படி தற்போது 4% அதிகரித்து 42%- ஆக உயர்ந்துள்ளது. இந்த 42% உயர்வானது கடந்த ஜனவரியில் இருந்து வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், அடுத்த மாதம் தசரா பண்டிகைக்கு முன் நிலுவைத் தொகை வழங்கப்படும் எனவும் பழைய ஓய்வூதியத் திட்டமும் விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மக்களே உஷார்.., விடாமல் கொட்டி தீர்க்கும் கனமழை.., ரெட் அலர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!!