ஊத்தி மூட தயாரான விஜய் டிவியின் பிரபல சீரியல்.., இதெக்கெல்லாம் காரணம் அந்த ஒரு விஷயம் தான்!!

0
ஊத்தி மூட தயாரான விஜய் டிவியின் பிரபல சீரியல்.., இதெக்கெல்லாம் காரணம் அந்த ஒரு விஷயம் தான்!!
ஊத்தி மூட தயாரான விஜய் டிவியின் பிரபல சீரியல்.., இதெக்கெல்லாம் காரணம் அந்த ஒரு விஷயம் தான்!!

விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில் யார் யார் கலந்துகொள்ள உள்ளார்கள் என்ற லிஸ்ட்டும் ட்ரெண்டிங்காகி வருகிறது. அதாவது டிடி, ரக்ஷன், ராஜலக்ஷ்மி, கார்த்திக் குமார் போன்றோர் கலந்துகொள்ள இருக்கின்றனர். மேலும் பொதுமக்களும் கலந்துகொள்ள இருப்பதால் இந்த சீசன் வேற லெவெலில் களைகட்ட போகிறது. ஏனெனில் முதல் சீசனில் ஜூலி கலந்துகொண்டு அதனால் ஏற்பட்ட பிரச்சனையால் தான் அந்த சீசன் ஹிட் கொடுத்தது.

திருமணத்திற்கு தேவதை போல தயாரான ராதிகா.., கோபி பின்னாடி சுத்துறதுல தப்பே இல்லப்பா..!!

இந்த நிகழ்ச்சி வெற்றியடையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இப்படி இருக்க பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாவதால் முக்கிய சீரியல் ஒன்றை தூக்க உள்ளனர். அதாவது சிற்பிக்குள் முத்து சீரியல் ஓரளவிற்கு டிஆர்பி ரேட்டிங்குடன் தான் ஓடிக்கொண்டுள்ளது. எனவே அதனை ஸ்டாப் செய்யவுள்ளனர். மேலும் சீரியல்கள் நேரமும் அதற்கு ஏற்றார் போல மாற்றியமைக்கவுள்ளன. இந்த தகவல் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here