ஹரிஷ் கல்யானுடன் ரொமான்ஸ் செய்ய உள்ள வெந்து வெந்து தணிந்தது காடு நாயகி – எந்த திரைப்படத்தில் தெரியுமா?

0

ஹரிஷ் கல்யாண் மீண்டும் ஒரு காதல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் சசி இயக்கவுள்ளதாகவும் ஜனவரி 14 ஆம் தேதியில் பஸ்ட் லுக் வெளியாகும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மீண்டும் ஒரு காதல் திரைப்படம்:

ஹரிஷ் கல்யாணின் திரைப்படங்கள் என்றாலே பெரும்பாலும் காதல், ரொமான்ஸ் காட்சிகள் தான் இடம்பெறும். இவரது அனைத்து திரைப்படங்களுமே பெரும்பாலும் வெற்றியை கொடுத்து வருகிறது. தற்போது ஹரிஷ் கல்யாண் மீண்டும் ஒரு காதல் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக வெந்து வெந்து  தணிந்தது காடு திரைப்படத்தின் கதாநாயகியான சித்தி இத்னானி  நடிக்கவுள்ளார்.

பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சசி தான் இந்த திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த திரைப்படம் குறித்து அவர் கூறிய போது சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்திற்கு பிறகு நல்ல காதல் படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போது அதற்கான வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்த திரைப்படத்தின் பஸ்ட் லுக் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதியில் வெளியாகும் என கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here