‘ரோஜா’ சீரியல் சிபு சூரியனுக்கு அப்படி என்ன தான் ஆச்சு?? பதட்டத்தில் ரசிகர்கள்!!

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் நடிகர் சிபு சூரியன் உடல் நிலை சரியில்லாதது போல புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரோஜா சீரியல் நடிகர் சிபு

ரோஜா சீரியல் தற்போது பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது ரோஜா தான் டைகர் மாணிக்கத்தின் மகள் என்ற உண்மை எப்பொழுது தெரியவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். அணு பல சதித்திட்டங்கள் தீட்டி வந்தாலும் அதனை அர்ஜுன் ரோஜா இருவரும் முறியடித்து விடுகின்றனர்.

ஆனால் மாணிக்கத்திற்கு ரோஜா தான் உங்களின் மகள் என்று எவ்வளவு ஆதாரம் கொண்டு வந்தாலும் எதையுமே நம்புவதாக இல்லை. அணு இதனை நாட்கள் வளர்த்து வந்தவரையே கேவலமாக பேசும் அளவிற்கு மாறி விட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படி பல விறுவிறுப்பான கட்டங்களுடன் ரோஜா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் சிபு சூரியனுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்நிலையில் சிபு சூரியன் உடல்நலம் சரியில்லாமல் இருப்பது போன்ற செய்தி பரவி வருகிறது. அதாவது ஒரு நபர் தனது இணையதள பக்கத்தில் ‘கெட் வெல் சூன் சூரியன் ப்ரோ’ என்று பதிவிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here