கொரோனா தொற்றில் இருந்து மீண்ட சத்யராஜ் – தற்போதைய நிலை குறித்து சிபிராஜ் செய்த ட்வீட்!!

0

சத்யராஜ் சில நாட்களுக்கு முன்பாக கொரோனாவின் தாக்குதலுக்கு ஆளானார். தற்போது பூரண குணம் பெற்று வீட்டில் ஒய்வு எடுத்து கொண்டிருப்பதாக இவரது மகன் சிபிராஜ் டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சத்யராஜ்:

வில்லன் கதாபாத்திரத்தில் தனது வாழ்க்கையை துவங்கிய நடிகர் சத்யராஜ் பின்னர் ஹீரோவாக நடித்தார். இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பாவாக நடித்தது தான் இன்று வரைக்கும் பேசப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக சத்யராஜ் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது இவரது மகனான சிபிராஜ் சத்யராஜின் உடல்நிலை குறித்து ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் எனது தந்தை பூரண நலம் பெற்று நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது வீட்டில் ஒய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறார். சில நாட்கள் ஓய்விற்கு பிறகு மீண்டும் எனது அப்பா அவரது வேலையை தொடங்குவார். எனது அப்பா மீண்டும் நலம் பெற்று வர வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என ட்வீட் செய்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here