ஹர்பஜன் சிங், இர்பான் பதானை தொடர்ந்து சினிமாவில் ஹீரோவாகும் வீரர்? இதிலும் சிக்ஸர் அடிப்பாரா?

0
ஹர்பஜன் சிங், இர்பான் பதானை தொடர்ந்து சினிமாவில் ஹீரோவாகும் வீரர்? இதிலும் சிக்ஸர் அடிப்பாரா?

தற்போதைய காலகட்டத்தில் கிரிக்கெட் வீரர்கள் திரையுலகில் நடிப்பதும், சினிமா நடிகைகளை கல்யாணம் செய்து கொள்வதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்த Friendship திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதே போல் கடந்த வருடம் கூட நடிகர் விக்ரம் நடித்த கோப்ரா படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ம் முக்கிய ரோலில் ரோலில் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார். தற்போது இந்த வரிசையில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஷுப்மன் கில் இணைய போகிறார் என்று இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

அட்ரா சக்க.., “கங்குவா” படத்திற்காக புதிய அவதாரம் எடுக்கும் நடிகர் சூர்யா.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

இவர் ஏற்கனவே Spider-Man: Across The Spider-Verse படத்திற்காக ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் டப்பிங் பேசியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவர் நடிப்பிலும் தனக்கு ஆர்வம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அதற்காக முதலில் நடிப்பு பயிற்சி எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் நேற்று நடந்த IPL பைனல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here