இந்தியாவின் அடுத்த ரன் மெஷின்னாக மாறும் சுப்மன் கில்…, இளம் வயதிலேயே இத்தனை சாதனைகளா??

0
இந்தியாவின் அடுத்த ரன் மெஷின்னாக மாறும் சுப்மன் கில்..., இளம் வயதிலேயே இத்தனை சாதனைகளா??
இந்தியாவின் அடுத்த ரன் மெஷின்னாக மாறும் சுப்மன் கில்..., இளம் வயதிலேயே இத்தனை சாதனைகளா??

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில், குஜராத் அணி பேட்டிங், பவுலிங் மற்றும் பில்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு 62 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதன் மூலம், குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறி உள்ளது. இந்த போட்டியில், குஜராத் அணியின் சுப்மன் கில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 60 பந்தில் 7 பவுண்டரி 10 சிக்ஸர்கள் உட்பட 129 ரன்களை விளாசி பல சாதனைகளை படைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது, இந்த போட்டியில் 78 ரன்களை இவர் எட்டிய போது நடப்பு ஐபிஎல் தொடரில் 800 ரன்களை கடந்த முதல் வீரரானார். மேலும், இந்த ஒரே தொடரில் 3 சதங்களை விளாசிய வீரராகவும் திகழ்கிறார். இதற்கு முன் SRH மற்றும் RCB அணிகளுக்கு எதிராக சதங்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை 16 போட்டிகளில் விளையாடிய இவர், 3 சதம், 4 அரைசதம் உட்பட 851* ரன்களை குவித்துள்ளார். இவர், CSK அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சதம் அல்லது அரை சதம் அடித்தால் நடப்பு சீசனில் 900 ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை அடைவதுடன் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலிலும் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக பள்ளிகளுக்கு கூடுதலாக 10 நாட்கள் விடுமுறை நீட்டிப்பு?? வெளியான முக்கிய தகவல்!!

மேலும், மும்பை அணிக்கு எதிரான போட்டியில், ஆட்ட நாயகன் விருதை வென்ற இவர், ஐபிஎல் வரலாற்றில் 10 முறை ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற இளம் வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் தட்டிச் சென்றுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாமல், இந்த ஆண்டில் மட்டும் டெஸ்ட் – 51.3 சராசரி, ODI – 78 சராசரி & 117.5 ஸ்ட்ரைக் ரேட் T20I – 40.4 சராசரி & 165.5 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் IPL – 60.8 சராசரி & 156.4 ஸ்ட்ரைக் ரேட் சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடத்தில் ஆறு மாதம் முடிவதற்குள் அதிக ரன்களை குவித்து அசத்தி வரும் இவர், விராட் கோலியை தொடர்ந்து அடுத்த ரன் மெஷினாக திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here