தொடர்ந்து எதிரணியை கதிகலங்க வைக்கும் சுப்மன் கில்.., ஒரு நாள் உலக கோப்பையில் இடம் கிடைக்குமா??

0
தொடர்ந்து எதிரணியை கதிகலங்க வைக்கும் சுப்மன் கில்.., ஒரு நாள் உலக கோப்பையில் இடம் கிடைக்குமா??
தொடர்ந்து எதிரணியை கதிகலங்க வைக்கும் சுப்மன் கில்.., ஒரு நாள் உலக கோப்பையில் இடம் கிடைக்குமா??

இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் இப்போது தொடர்ந்து அனைத்துப் போட்டிகளிலும் அதிரடி காட்டி வருவதால் ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவாரா என பார்க்கலாம்.

சுப்மன் கில்

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இப்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான T20, ஒரு நாள் தொடரில் விளையாடி வருகின்றனர். இந்த தொடருக்கான முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி இரு போட்டிகளிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வென்று அசத்தியுள்ளனர். மேலும் கடைசி ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று விட்டால் நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இந்திய அணியின் இந்த அபார வெற்றிக்கு இளம் வீரரான சுப்மன் கில் தான் முக்கிய காரணமாக உள்ளார். இவர் முதல் போட்டியில் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 200 ரன்களுக்கு மேல் குவித்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அதேபோன்று நேற்று நடந்த 2 வது போட்டியிலும் அபாரமாக விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

போக போக எகிரும் வாரிசு வசூல்.., அதற்காக பார்ட்டி வைத்து அசத்திய படக்குழுவினர்!!

இவர் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் இது போன்ற அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த ஆண்டு வரவிருக்கும் ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் இவர் இடம் பெறுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். எனவே வரும் உலக கோப்பை தொடரில் தேர்வு குழுவினர் மற்றும் BCCI இவரை இந்திய அணியில் எடுப்பார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here