என்னடா வசனமே புரியல…!பியானோ இசைத்தபடி ஆங்கில பாடலை பாடி அசத்திய உலகநாயகன் மகள்!!!

0

திரைத்துறையின் முன்னணி நடிகையாக விளங்குபவர் உலக நாயகனின் மகள் ஸ்ருதி ஹாசன் அவர்கள். அவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில்  பியானோ வாசித்தபடி ஒரு ஆங்கில பாடலை பாடியுள்ளார். இது அவரின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.

உலகம் முழுவதும் பல ரசிகர்களை கொண்டவர் உலக நாயகன்  கமல்ஹாசன். இவரின் மகள் ஸ்ருதிஹாசன் அவர்கள் தன்னுடைய சிறு வயதிலேயே பாடல்களை  பாட தொடங்கிவிட்டார். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் பல படங்களுக்கு பின்னணி பாடியுள்ளார், இசையமைத்து உள்ளார். தன் அப்பாவை போலவே பன்முக திறமைசாலியாகவும் இருந்து வருகிறார். நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் ‘தேவர் மகன் ‘ படத்தில் ‘போற்றிப் பாடடி பெண்ணே’ பாடலில் தொடங்கியது இவரின் பாடகி பயணம். அந்த பிறகு பல படங்களில் பாடியுள்ளார்.

மேலும், நடிகர் சூர்யா அவர்களின் ‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் ஒரு நாயகியாக திரை முன் தோன்றினார். அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் பல சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் தவிர மற்ற மொழி படங்களிலும் அம்மணி கலக்கி வருகிறார் .

இந்நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் பியானோ இசைத்தபடி மிக மெல்லிய ஒரு ஆங்கில பாடலை பாடியுள்ளார். பெரும்பாலும் அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்த வீடியோ மிக வித்தியாசமாக இருந்து வருகிறது. மேலும் இந்த பாடலில் அவரின் குரலை கேட்கும் அனைவருக்கும் இனிமையை தரும் வகையிலும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here