காட்டு குயிலாக வலம் வரும் கவர்ச்சி குயின் ஸ்ரேயா…!ரசிகர்களை கிறங்க வைத்த புகைப்படங்கள் இதோ!!!

0

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை  ஸ்ரேயா . தனது படங்கள் மற்றும் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை தன்னுடைய அழகால் கவர்ந்து வந்தார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை  வெளியிட்டு உள்ளார். இதில் காட்டுக்குள் பல போட்டோக்கள் எடுத்து அந்த புகைப்படங்களை சமூக தளங்களில் பகிர்ந்து உள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இஷ்டம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரைக்கு வந்தவர் நடிகை ஸ்ரேயா . அதன் பிறகு தெலுங்கு, ஹிந்தி  போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தமிழ் மொழியில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் அவரின் படங்களில் கவர்ச்சிக்கு எந்த குறைவும்  இருக்காது. மேலும் ஓரிரு ஆங்கில மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு தொழிலதிபரை மணந்து திருமண வாழ்க்கைக்கு சென்று விட்டார். தற்போது மீண்டும் தனது புகைப்படங்கள் மூலம்  ரசிகர்களுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த வகையில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வந்தார். தற்போது காட்டில் ஒரு போட்டோ ஷூட்  நடத்தி உள்ளார். அந்த போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதில் கருப்பு நிற உடையில் காட்டில் ஒரு கவர்ச்சி குயில் போல வலம் வருகிறார். இந்த புகைப்படம் வைரலாவதோடு பல லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here