பிரபல குறும்பட நடிகை தூக்கிட்டு தற்கொலை – ஆசையாய் நடித்த படத்தின் டீசர் வெளியான அன்றே நடந்த விபரீதம்!!

0
தமிழகத்தில் அடுத்த துயரம்.. பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை - போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்!
தமிழகத்தில் அடுத்த துயரம்.. பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை - போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்!

சிசு குரல் என்ற குறும் படத்தில் நடித்த நடிகை துர்கா தேவி, நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை தற்கொலை:

விழுப்புரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த, மாறன் என்பவரின் 17 வயது மகள் துர்கா. 12ம் வகுப்பு படித்து வரும் இவர், தற்போது சிசு குரல் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீஸர் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் நேற்றிரவு நடிகை, தனது வீட்டில் உள்ள பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். நடிகையின் உடலை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதுள்ளனர்.

இதனையடுத்து, இவரது உடலை கைப்பற்றிய போலீசார் இவரது தற்கொலை குறித்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர், நீண்ட நாள் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால் இந்த விபரீத முடிவை மேற்கொண்டிருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது. ஆனால் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்தால் மட்டுமே இதற்கான தீர்வு கிடைக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here