கடைல மட்டுமில்லங்க வீட்டுலையும் சுவையா செய்யலாம் சவர்மா…ட்ரை பண்ணி தான் பாருங்களே!!!

0
கடைல மட்டுமில்லங்க வீட்டுலையும் சுவையா செய்யலாம் சர்வமா...ட்ரை தான் பண்ணி தான் பாருங்களே!!!
கடைல மட்டுமில்லங்க வீட்டுலையும் சுவையா செய்யலாம் சர்வமா...ட்ரை தான் பண்ணி தான் பாருங்களே!!!

ஹோட்டல்களில் கிடைக்கும் சில வகை உணவுப் பொருட்களை வீட்டில் செய்வது கிடையாது. அதற்கு காரணம் அவர்கள் உபயோகிக்கும் சில பொருட்கள் வீட்டில் இருப்பதில்லை அல்லது ஹோட்டல் சுவை வீட்டில் கிடைப்பதில்லை. இந்நிலையில் நாம் இந்த பதிவில் கடைகளில் ஈஸியாக கிடைக்கும் சிக்கன் சவர்மா வீட்டிலேயே எவ்வாறு செய்வது என்பதை காணலாம்.

கடைல மட்டுமில்லங்க வீட்டுலையும் சுவையா செய்யலாம் சர்வமா...ட்ரை தான் பண்ணி தான் பாருங்களே!!!
கடைல மட்டுமில்லங்க வீட்டுலையும் சுவையா செய்யலாம் சர்வமா…ட்ரை தான் பண்ணி தான் பாருங்களே!!!

தேவையான பொருட்கள்

சீனி – 1 தேக்கரண்டி

ஈஸ்ட் – 2 தேக்கரண்டி

மைதா – 3 கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் -தேவையான அளவு

கேரட் – 1

வெள்ளரிக்காய் – 1

குடைமிளகாய் – 1

வெங்காயம் – 1

புதினா – சிறிதளவு

எலுமிச்சை பழம் – 1

மிளகு தூள் – 1/4 தேக்கரண்டி

சிக்கன் – 1/2 கிலோ

கெட்டியான தயிர் – 4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

சீரக தூள் – 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

மயோனைஸ் – 1/4 கப்

பூண்டு – 1

கடைல மட்டுமில்லங்க வீட்டுலையும் சுவையா செய்யலாம் சர்வமா...ட்ரை தான் பண்ணி தான் பாருங்களே!!!
கடைல மட்டுமில்லங்க வீட்டுலையும் சுவையா செய்யலாம் சர்வமா…ட்ரை தான் பண்ணி தான் பாருங்களே!!!

செய்முறை

முதலில் சூடான தண்ணீரில் சீனி மற்றும் ஈஸ்ட் சேர்த்து 5 நிமிடங்கள் விட வேண்டும். அதன் பின்னர் மைதா, உப்பு மற்றும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை 1 அல்லது 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இதையடுத்து ஒரு பாத்திரத்தில் நீளவாக்கில் நறுக்கி வைத்து உள்ள வெள்ளரிக்காய், குடைமிளகாய், கேரட், புதினா, சிறிது எலுமிச்சை சாறு மற்றும் மிளகு தூள் சேர்த்து சாலட் தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் இன்னொரு பாத்திரத்தில் சிக்கன், கெட்டியான தயிர், மஞ்சள் தூள், சீரக தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு, எலுமிச்சை பழ சாறு மற்றும் உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறி வைத்து கொள்ள வேண்டும். இதை கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும். அதன் பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் ஊற வைத்து உள்ள சிக்கன் துண்டுகளை ஒன்றின் பின் ஒன்றாக போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும். அது ஆறிய பிறகு சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும்.

கடைல மட்டுமில்லங்க வீட்டுலையும் சுவையா செய்யலாம் சர்வமா...ட்ரை தான் பண்ணி தான் பாருங்களே!!!
கடைல மட்டுமில்லங்க வீட்டுலையும் சுவையா செய்யலாம் சர்வமா…ட்ரை தான் பண்ணி தான் பாருங்களே!!!

அதன் பின்னர் மயோனைஸ் எடுத்துக் கொண்டு அதில் பூண்டை சேர்த்து கிளறி கொள்ளவும். இதையடுத்து பிசைந்து வைத்து உள்ள மாவை ஓரளவிற்கு தடிமனாக இருக்கும் வகையில் சப்பாத்தி பதத்திற்கு திரட்டி கொள்ள வேண்டும். அதன் பின்னர் அதை அடுப்பில் போட்டு பக்குவமாக சுட்டு எடுக்கவும்.

இந்நிலையில் ஒரு சப்பாத்தில் மயோனைஸ் கலவையை எடுத்து சப்பாத்தி முழுவதும் தேய்த்து அதில் சிக்கன் துண்டுகள், காய்கறிகள் சாலட் , நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை வைத்து ரோல் செய்து கொள்ள வேண்டும். தற்போது சுவையான சிக்கன் சவர்மா ரெடி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here