ஷூட்டிங்கில் டம்மி ஆயுதங்கள் பயன்படுத்த புதிய ரூல் .., நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
ஷூட்டிங்கில் டம்மி ஆயுதங்கள் பயன்படுத்த புதிய ரூல் .., நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
ஷூட்டிங்கில் டம்மி ஆயுதங்கள் பயன்படுத்த புதிய ரூல் .., நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

சினிமா துறையில் பயன்படுத்தப்படும் டம்மி ஆயுதங்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

டம்மி ஆய்தம்:

தமிழ் சினிமா துறையில் இடம்பெறும் சண்டைக்காட்சியில் நடிகர்கள் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் எல்லாமே டம்மி ஆயுதங்கள் தான். ஒரிஜினல் ஆயுதங்கள் பயன்படுத்தினால் ஏதேனும் உயிர் சேதம் ஆகிவிடும் என்று முந்தைய காலத்தில் இருந்து இதே முறையை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தின் ஷூட்டிங்கிற்கு கொண்டு செல்லப்பட்ட டம்மி ஆயுதங்களை காவல்துறை கைப்பற்றியது.

தமிழ் படத்திற்கு தெலுங்கு நடிகரா? இதுல எவ்ளோ இருக்கு தெரியுமா? கோபத்தில் சீறிய பிரபல இயக்குனர்!!

இதனால் தென் இந்திய திரைப்பட டம்மி எஃபெக்ட்ஸ் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் தமிழகத்தில் டம்மி ஆயுதங்களுக்கு உரிமங்கள் வழங்குவது மட்டுமின்றி தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு ஐகோர்ட் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்னிலையில் விசாரணை நடந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து மனுதாரர் வைத்திருக்கும் ஆயுதங்களை ஆய்வு செய்த பிறகே சான்றிதழ் வழங்க வேண்டும் என்று காவல்துறையினர் பேசும் போது, நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா குறுக்கே நுழைந்து, மனுதாரர்களிடம் டம்மி ஆயுதங்கள் அதிகமாக இருக்கிறதா என காவல் துறையினர் ஆய்வு செய்த பின்னரே சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் இது குறித்து முழு உத்தரவு பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here